02 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
உலக உணவு கருத்தரங்கு : தமிழகம் பங்கேற்பு
சென்னை: மத்திய அரசின், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் சார்பில், 'உலக உணவு இந்தியா - 2017' என்ற தலைப்பில், மூன்று நாட்கள் கருத்தரங்கம், டில்லியில், நாளை துவங்குகிறது; பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
18 மாவட்டங்களுக்கு 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
மழை நிவாரணப் பணிகளை கண்காணிக்க, 18 மாவட்டங்களுக்கு, 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய சகோதயா மாநாடு : மதுரையில் இன்று துவக்கம் மாநாடு
மதுரை: மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது. இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வரன்(முதல்வர், அத்யப்பனா பள்ளி, மதுரை), செயலாளர் ஹம்ச பிரியா (முதல்வர், மகாத்மா பள்ளி, மதுரை) கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தரம் மேம்பாடு, கற்பித்தல் முறையில் புதிய மாற்றங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் சகோதாயா சார்பில் தேசிய மாநாடு நடத்தப்படுகிறது.
முதன் முறையாக இந்தாண்டு மதுரை சகோதயா சார்பில் ராஜா முத்தையா மன்றத்தில் 'தரமான கல்வி' என்ற தலைப்பில் நடக்கிறது.
முதல் டி20: இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
பாரீஸ் மாஸ்டர்ஸ்: நான்காவது சுற்றில் நடால்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு
சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தேசிய அளவிலான யு-17 செஸ் போட்டி: கோவை சிறுமி பிரியங்கா சாம்பியன்
கோவையில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தேசிய அளவிலான செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த கே.பிரியங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
துப்பாக்கி சுடுதல்: ஷாஸார், பூஜாவுக்கு தங்கம்
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
இன்று
இன்று அனைத்து ஆன்மாக்கள் தினம்
அனைத்து ஆன்மாக்கள் தினம் (ஆல்சோல்ஸ் டே) எனப்படும் கல்லறை தினம், இன்று அனுஷ்டிக்கப் படுகிறது. மறைந்த கிறிஸ்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுடைய கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி வைத்து மரியாதை செலுத்தும் தினமே கல்லறைத் திருநாள். கல்லறை தினத்துக்கு ஆண்டவரே வித்திட்டார். பரிசுத்தவான்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கி.பி.998லிருந்து பிரான்ஸ் தேசத்தில் நவ.2ம் தேதியை பொதுவான கல்லறை தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று கல்லறை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1903 நவம்பர் 2
பரிதிமாற் கலைஞர் எனப்படும், வி.கே.சூரியநாராயண சாஸ்திரியார், மதுரை அருகே விளாச்சேரியில், கோவிந்த சிவன் - லட்சுமி தம்பதிக்கு மகனாக, 1870 ஜூலை 6 ல் பிறந்தார். இவர் உயரிய செந்தமிழ் நடையில், பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை பெற்றவர். இவருக்கு, பெற்றோர் இட்ட பெயர், சூரியநாராயணன். பின்னாளில், சூரியநாராயண சாஸ்திரியார் என அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால், தன் பெயரை வடமொழி கலக்காத துாய தமிழில், பரிதிமாற் கலைஞர் என, மாற்றிக் கொண்டார். இவரது மரபைப் பின்பற்றிய, 19 பேருக்கு, 15 லட்சம் ரூபாயை பரிவுத் தொகையாக, தமிழக அரசு அளித்தது. அவரது, ௧௩ நுால்கள், 2006 டிச., 2ல் அரசுடமையாக்கப்பட்டன. 1903 நவ., 2ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.