9 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
செவ்வாயின் நிலவு முதல் படம் வெளியீடு
வாஷிங்டன்:அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' அனுப்பிய, ஒடிசி செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் நிலவான போபோசின் முதல் படத்தை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக, ஒடிசி என்ற செயற்கைக்கோளை, 2001ல் அனுப்பியது. செவ்வாய் குறித்து ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒடிசி, செவ்வாய் கிரகத்தின் நிலவான, போபோஸ் குறித்த முழுமையான படங்களை முதல் முறையாக அனுப்பியுள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்
தனியார் பள்ளி ஆசிரியர் களும், ௨௦௧௯க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இந்திய - சர்வதேச அறிவியல் விழா சென்னையில் 13ம் தேதி துவக்கம்
சென்னை:''இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், 13ல் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. ''பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ., பிரித்தெடுக்கும் முயற்சியில், ௧,௦௦௦ மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்,'' என, மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்
பதவி ஏற்ற பின் முதன்முறையாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்
தமிழக கவர்னராக பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றார்.
உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டா ரிகா தகுதி
அடுத்த ஆண்டு ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க கோஸ்டா ரிகா அணி தகுதி பெற்றுள்ளது.
சீன ஓபன்: நடால் சாம்பியன்
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் அபார வெற்றி
வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி கண்டன.
1897அக்டோபர் 9
விடுதலைப் போராட்ட வீரரான, எம்.பக்தவத்சலம், சென்னை நசரத்பேட்டையில், கனகசபாபதி முதலியார் - மல்லிகா தம்பதிக்கு மகனாக, 1897, அக்., 9ல் பிறந்தார். சட்டம் பயின்ற அவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். விடுதலை போராட்டக் காலங்களில், அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு, எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். சோவியத் யூனியனின் அழைப்பை ஏற்று, அந்நாட்டிற்கு, 1960ல் சென்று வந்தார்.அரசியல் ரீதியாவும், தனிப்பட்ட முறையிலும், மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர். 1987 ஜன., 31ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

இன்று