8 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
85-ஆவது ஆண்டு விழா கொண்டாடிய இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி உருவாக்கப்பட்டது. முதன்முதலில் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட இதனை ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று அழைத்தனர். பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் 85-ஆவது ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாளை அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் அருண் ஜேட்லி
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் சார்பில் நடைபெறும் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ள அருண் ஜேட்லி அமெரிக்க வர்த்தக செயலாளர், இத்தாலி மற்றும் ஈரானிய நிதி அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கிறார்.
சீன ஓபன்: சானியா ஜோடி தோல்வி
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சீனாவின் ஷுவாய் பெங் ஜோடி தோல்வி கண்டது.
முதல் டி20: இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி
ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஸ்பெயின் அணி தகுதி பெற்றுள்ளது.