7 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
அணு ஆயுத எதிர்ப்பு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஓஸ்லோ: அணு ஆயுதத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும், 'ஐகேன்' எனப்படும், 'அணுஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம்' என்ற அமைப்புக்கு, 2017ம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஐகேன்' என்றழைக்கப்படும், அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுடன், ஏழு கோடி ரூபாயும் இந்த அமைப்புக்கு கிடைக்கும்.
கவர்னராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித், நேற்று பதவியேற்றார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எஸ்.பி.ஐ., புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு
மும்பை : எஸ்.பி.ஐ., தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக, ரஜ்னிஷ் குமார், இன்று(அக்.,7) பொறுப்பேற்கிறார்.
'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'
'இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார்.
பத்திரிகையாளர் கவுரிக்கு பிரிட்டன் அமைப்பு விருது!
பெங்களூரு: மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ், இந்த ஆண்டுக்கான, 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ரா இன் வார்' என்ற அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு, அன்னா பொலிகோவஸ்கயா விருது வழங்கி கவுரவிக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 2006ல் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், அன்னா பொலிகோவஸ்கயா நினைவாக, இந்த விருதை வழங்கி வருகிறது.
1708 அக்டோபர் 7
குரு கோவிந்த் சிங், பீஹார் மாநிலம், பாட்னாவில், ஒன்பதாவது சீக்கிய குருவான, குருதேக் பகதுார் - மாதா குஜ்ரி மகனாக, 1666 டிச., 22ல்- பிறந்தார். பிற்கால சீக்கிய மத கோட்பாடுகளுக்கு வித்திட்டவர். 'மது அருந்தாமை, புகை பிடிக்காமை, நாள் தோறும் ஐந்து முறை வழிபடுதல், வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு தானம், வட்டி வாங்காமை ஆகியவற்றை கடைபிடித்து, சீக்கியர் வாழ வேண்டும்' என, சட்டம் இயற்றி, கட்டாயமாக்கினார். 1708 அக்., 7ல் காலமானார்; அவர் இறந்த தினம், இன்று.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து : முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி
17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது.
உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி
அடுத்த ஆண்டு ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர்!
ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை கிளேர் போலோசேக் பெறவுள்ளார்.
புதுடில்லி: இன்றைய தேதியான 7.10.17க்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் (7 10 17) ஒரே மாதிரி தான் வரும். இதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்கின்றனர்.
ஒரு எண்ணையோ அல்லது எழுத்தையோ எழுதி, பின்னால் இருந்து படித்தாலும் மாறாமல் வருவது தான் "பாலின்டிரோமின்' சிறப்பு. தமிழில் "விகடகவி' என்ற வார்த்தையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
இந்த நூற்றாண்டில் ஏழு இலக்கங்களை கொண்ட 26 தேதியும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 தேதியும்,மொத்தம் 38 "பாலின்டிரோம்' தேதிகள் வருகின்றன.

இன்று

இன்றைய புதுமை