5 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

ஜிபோடி நாட்டுடன் முக்கிய ஒப்பந்தம்

ஜிபோடி சிட்டி: வெளிநாட்டு அலுவலக அளவில், தொடர்ச்சியான கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்த, ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, ஜிபோடியுடன், மத்திய அரசு, நேற்று ஒப்பந்தம் செய்தது.

கண்ட்லா துறைமுகம் பெயர் மாற்றம்

புதுடில்லி: குஜராத் மாநிலத்தில் உள்ள, கண்ட்லா துறைமுகம், 'தீன்தயாள் துறைமுகம்' என, பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

கலாம் யாத்திரை அறிவியல் வாகனம் : ராமேஸ்வரத்தில் துவக்கம்

ராமேஸ்வரம்: அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'கலாம் யாத்திரை' எனும் அறிவியல் வாகனம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. கல்பாக்கம் அணு மின் ஆராய்ச்சி நிலைய ஏற்பாட்டில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், அக்.13 முதல் அக்.16 வரை இந்திய உலக அறிவியல் விழா நடைபெற உள்ளது. இதில், அறிவியல் கண்காட்சியகம், புகைப்படம் இடம்பெற உள்ளது. இதையடுத்து அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று 'கலாம் யாத்திரை' எனும் அறிவியல் வாகனத்தை, ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவகம் முன், கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி வெங்கட்ராமன் முன்னிலையில், அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் கொடியசைத்து துவக்கினார்.

ஊட்டியில் 3 5 ஏக்கரில் பூங்கா: அமைக்கிறது கர்நாடகா

ஊட்டி: ஊட்டியில், கர்நாடக அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், 35 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதி யில், கர்நாடக அரசுக்கு மைசூரு மகாராஜா வழங்கிய, பல ஏக்கர் நிலம் உள்ளது. துவக்கத்தில் உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள் விளைவிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் இந்நிலம் பயன்பாடற்று போனது. எனவே, இங்கு பூங்கா அமைத்து, சுற்றுலா தலமாக மாற்ற, கர்நாடக தோட்டக்கலைத் துறை திட்டமிட்டது. கடந்த, 11 ஆண்டுகளாக, 35 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்தது. தற்போது, நிறைவு பெற்று, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

ஏடிபி சேலஞ்சர்: திவிஜ் சரண் ஜோடி முன்னேற்றம்

தைவானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.

 

இன்று


1934 அக்டோபர் 5

சோ ராமசாமி, சென்னையில், ரா.ஸ்ரீநிவாசன் - ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக, 1934 அக்., 5ல் பிறந்தார். சட்டம் பயின்ற அவர், 1957 முதல், 1962 வரை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். 1957ல், நாடகங்களை எழுத ஆரம்பித்தார். 1970ல், 'துக்ளக்' வார இதழையும், 1976ல், 'பிக் விக்' என்ற ஆங்கில இதழையும் துவக்கினார். பகீரதன் எழுதிய, 'தேன்மொழியாள்' என்ற மேடை நாடகத்தில், இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் சோ. அதையே, தன் பெயரின் முன் சேர்த்து கொண்டார். 2016, டிச., 7ல் காலமானார்; அவர் பிறந்த தினம் இன்று.