4 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
ஆளுங்கட்சி தலைவராக நவாஸ் மீண்டும் தேர்வு
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப், அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவராக, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ஐ.நா., சபையின் உயர் பதவியில் தமிழர்
புதுடில்லி: ஐ.நா., சபையின் உலக சுகாதார நிறுவனத்தின்(டபிள்யு.எச்.ஓ.,) துணை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
புதுடில்லி: புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும். அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும்.
இந்திய கல்வியாளருக்கு அமெரிக்காவில் பதவி
புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர், பிரஜாபதி திரிவேதி, 64, 'நாபா' எனப்படும், அமெரிக்காவின், கவுரவமிக்க அமைப்புகளில் ஒன்றான, தேசிய பொது நிர்வாக மைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'
மீரட்: நாட்டின் வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி ஆற்றிய அரும்பணிகளை பாராட்டி, உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை மற்றும் அவரது பெயரில் கோவில் கட்ட, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திட்டமிட்டு உள்ளார்.
டி.வி.ஆர்., பற்றி தேசிய கருத்தரங்கு : காமராஜ் பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு
மதுரை: ''மதுரை காமராஜ் பல்கலையில், 2018ல், டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாறு, நாளிதழில் அவரது பங்கு குறித்து, இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடத்தப்படும்,'' என, துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்தார்.
சீன ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால், சைமோனா
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
உலக செஸ்: காரைக்குடி மாணவருக்கு தங்கம்
சீனாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஷில்லாங் நகரில் செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். அதில் 12 வயதுக்குள்பட்ட குழுப் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்றனர். அந்தப் பிரிவில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் எம். பிரனேஷூம் இடம் பெற்றிருந்தார். இவர் போட்டியில் அபாரமாக விளையாடி 7-க்கு 7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
'ஏ' அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்: நியூஸிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது இந்தியா
நியூஸிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய 'ஏ' அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய 'ஏ' அணி கைப்பற்றியது.
1904 அக்டோபர் 4
திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள, செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுாரில், நாச்சிமுத்து -- கருப்பாயி தம்பதிக்கு மகனாக, 1904 அக்., 4ல் பிறந்தார். வறுமையால், பள்ளிப் படிப்பை, ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார்.காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். 1932ல் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் துவங்கிய போது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது.திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த, மறியலில் பங்கேற்றார். 1932 ஜன., 10ல் கையில் தேசியக் கொடி ஏந்தி, தொண்டர் படைக்கு தலைமை ஏற்று, அணிவகுத்து சென்றார். அப்போது, காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில், ஜன., 11ல் அவர் இறந்தார். கொடிக்காத்த குமரன் என, அனைவராலும் போற்றப்படும் அவரின் பிறந்த தினம், இன்று.

இன்று