30 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஆதரவு
வாஷிங்டன் அமெரிக்க மத்திய வங்கியி்ன் தலைவராக மாஜி ரிசவர் வங்கி கவர்னர் தேர்வு செய்ய ஆதரவு பெருகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழும் கைவினை பொக்கிஷம் விருது வழங்க அரசு முடிவு
சென்னை: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகமான, பூம்புகார் சார்பில், 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுக்கு, கைவினைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
45 'ரோபோ'க்கள் இயக்கம்: சென்னை ஐ.ஐ.டி., சாதனை
சென்னை: தேசிய உயர் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், துாய்மை பணிக்கு, 45 'ரோபோ'க்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்தி, ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
என்.ஐ.ஏ., தலைவராக மோடி பொறுப்பேற்பு
புதுடில்லி: என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த, சரத் குமார் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவராக, யோகேஷ் சந்தர் மோடி அறிவிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவர் பொறுப்பேற்றார்.
தேசிய குத்துச்சண்டை: மனோஜுக்கு தங்கம்; சிவ தாபாவுக்கு வெள்ளி
தேசிய குத்துச்சண்டை போட்டியில் மனோஜ் குமார் தங்கமும், சிவா தாபா வெண்கலமும் வென்றனர்.
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்; சச்சின் சாதனையை தகர்த்தார்
ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்விஸ் இண்டோர்: ரோஜர் ஃபெடரருக்கு 8-ஆவது பட்டம்
ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியாவை இணைத்த 'இரும்பு மனிதர்' -தேசிய ஒற்றுமை தினம்
பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமை வல்லபாய் படேலை சேரும். இவரது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக (அக்., 31) கொண்டாடப்படுகிறது.
குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக், 31ல் படேல் பிறந்தார். காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. . இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்ததால் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என போற்றப்படுகிறார். -தேசிய ஒற்றுமை தினம்.
அதிகரிக்கும் கார்பன் அளவு: ஐ.நா., எச்சரிக்கை
ஜெனீவா: 'உலகளவில் வெளியிடப்படும் கார்பன் வாயு அளவு, 2016ல் அதிகமாக இருந்தது' என ஐ.நா., சபை எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கை: 'கடந்த 2016ல் இதுவரை இல்லாத அளவாக கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் 400 பி.பி.எம்.,ஆக இருந்த இதன் அளவு, 2016ல் 403.3 பி.பி.எம்., ஆக அதிகரித்துள்ளது. கடந்த 30 லட்சம் ஆண்டுகளில் 2016ல் பதிவான அளவே மிக அதிகம். பி.பி.எம் என்பது வளிமண்டலத்திலுள்ள மொத்த வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம் பங்குகளாகப் பிரித்தால் வரும் அளவு. அதில் 403.3 பங்கு கார்பன் உள்ளது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்காமல் இருந்தால், இந்த நுாற்றாண்டுக்குள் மிக அபாயகரமான வெப்பநிலையை பூமி எட்டும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று

இன்றைய தகவல்