29 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம்: ஈரான் அதிபர் ஹசன் ரகானி

ஈரான்: நாட்டு பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம் என்றும் அவ்வாறு தயாரிப்பது சர்வதேச உடன்படிக்கைளை மீறுவதாக கூறுவதை நம்பவில்லை என்று ஈரான் அதிபர் ஹசன் ரகானி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் இழப்பு: மத்திய அரசு ரூ.8,698 கோடி இழப்பீடு

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாநில அரசுகள் சந்தித்த வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.8,698 கோடி இழப்பீடு அளித்துள்ளது என்று பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

மகளிர் ஹாக்கி: சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா

2017-ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ரசிகர்கள் எண்ணிக்கை: இந்தியா சாதனை

17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றில், ஆட்டங்களைக் காண மைதானங்களுக்கு அதிக ரசிகர்கள் திரண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

புரோ கபடி: பாட்னா "ஹாட்ரிக்' சாம்பியன்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற இலங்கை 

பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக அந்நாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை சென்றது.