23 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியாவுக்கு நவீன 'ட்ரோன்'கள்; அமெரிக்க அரசு தீவிர பரிசீலனை
வாஷிங்டன் : ஆயுதங்களுடன் கூடிய, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா விமானங்களை வழங்க வேண்டும் என்ற, நம் நாட்டின் கோரிக்கையை, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான, அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
ஜப்பான் பிரதமர் யார்?; இன்று தேர்தல் முடிவு
டோக்கியோ: ஜப்பானில் புயல், கன மழைக்கு மத்தியில் பிரதமர் பதவிக்கான தேர்தல், நேற்று நடந்து முடிந்தது. பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா 3-ஆவது முறையாக சாம்பியன்
10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1940 - அக்டோபர் 23
பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, 1940 அக்., 23ல் பிரேசிலின், டிரெசு கோரகோயெசு என்ற ஊரில் பிறந்தார். சிறுவயது முதல், கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய இவர், பிரேசில் நாட்டிற்கு மூன்று முறை உலகக் கோப்பையை வென்று தந்தவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில், 1,282 கோல்களை அடித்தவர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும், அவர், 'கறுப்பு முத்து' என, அழைக்கப்படுகிறார். அவருக்கு, 1978ல் அனைத்துலக அமைதி பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆண்டே, கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய பெருமையும் அவரையே சாரும். அவரது ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில், 25 நாடுகளைச் சேர்ந்த, 761 பத்திரிகையாளர்கள், சில நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். அவர் பிறந்த தினம் இன்று.

இன்று