22 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக சிபி ஜார்ஜ்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சிபி ஜார்ஜ் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசியில் இன்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா
தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா சிவகாசியில் திங்கள்கிழமை மாலை (அக்.23) நடைபெற உள்ளதால், அந் நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இமயமலை ஆராய்ச்சியாளர் நைன் சிங் ராவத்துக்கு கௌரவம் அளித்த கூகுள்
இமயமலை ஆராய்ச்சியாளர் நைன் சிங் ராவத்தின் 187-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், அவர் மலைகளுக்கு நடுவில் நின்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போன்ற ஓவியத்தை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டு கௌரவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின
200-ஆவது போட்டியில் சதமடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்தார்.
சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல்
பிரிட்டனில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
என்பிஏ ஏலத்தில் இந்திய வீரர்
அமெரிக்காவின் "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் இந்திய கூடைப்பந்து அணி வீரர் அம்ஜியோத் சிங் பங்கேற்கிறார்.
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் இறுதிக் கடிதம்: எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடத் திட்டம் தெரியுமா?
தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
1912-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக், அப்பொழுதைய சமயத்தில் உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகும். மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான இது தனது கன்னி பயணமாக இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் நடுவில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குளாகி இரண்டாக உடைந்து, கடலில் மூழ்கியது.
இந்த கோர விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது ஜல சமாதியாகி இறந்த பயணிகளில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். அப்பொழுது இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு சக பயணிகள் குறித்தெல்லாம் ஹோல்வர்சன் எழுதி இருக்கிறார். அக்கடிதமானது விபத்தில் உயிர் தப்பிய ஒருவரால் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
பலரிடம் கைமாறிய நிலையில் தற்பொழுது அக்கடிதம் நிலையில் இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது. இக்கடிதத்தை 80 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்காள தேசம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்
வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின
200-ஆவது போட்டியில் சதமடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்தார்.
சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல்
பிரிட்டனில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
என்பிஏ ஏலத்தில் இந்திய வீரர்
அமெரிக்காவின் "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் இந்திய கூடைப்பந்து அணி வீரர் அம்ஜியோத் சிங் பங்கேற்கிறார்.
இன்றைய தகவல்