21 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

 

'பாரத் நெட்' திட்டம்; ரூ.1,230 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

சென்னை : தமிழகத்தில், 'பாரத் நெட்' என்ற, கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 1,230 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது.

 

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், டிச.,31க் குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் ஓபன்: காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

ஒருநாள் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா 

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில், அணிகளுக்கான பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் இந்திய அணி 

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, அதில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது.

இன்று


1925அக்டோபர் 21

சுர்ஜித் சிங் பர்னாலா, ஹரியானா மாநிலம், அடேலி பேக்பூரில்,1925 அக்., 21ல் பிறந்தார். 1946ல், சட்டம் பயின்ற அவர், பர்னாலாவில், மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு, பர்னாலா தொகுதியில் இருந்து, சட்டசபை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல், பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார்.  1985ல், சிரோமணி அகாலி தள கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பஞ்சாப் முதல்வராக்கப்பட்டார். அந்த கால கட்டத்தில், பொற்கோவிலில் நடந்த, 'நீல நட்சத்திர நடவடிக்கை' என்ற ராணுவ தாக்குதலால், சீக்கியர்கள் மன நிம்மதி இழந்திருந்தனர். 1990ல், தமிழக கவர்னரானார். அரசியல் உள்நோக்கத்தோடு, அப்போதைய முதல்வர், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., அரசை கலைக்க, உரிய வகையில் அறிக்கை தரும்படி, பிரதமர் சந்திரசேகர் கோரினார். அதை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர். 2017 ஜன., 14ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.