20 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா தேர்வு

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(37) பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகிறார்.

வெள்ளி விழா காணும் நெல்லை அருங்காட்சியகம்! : ஊமைத்துரை சிறை வைக்கப்பட்ட இடம்

திருநெல்வேலி: வீரபாண்டிய கட்ட பொம்மனின் தம்பி, ஊமைத்துரை சிறை வைக்கப்பட்ட இடம், நெல்லை மாவட்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

டென்மார்க் ஓபன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2ஆவது சுற்றுக்கு முன்னேற, பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 6}2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இன்று


பறக்க வைக்கும் வேலை ரெடி! இன்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு தினம்

விமானம் பாதுகாப்பாக இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்., 20ல் உலக விமான போக்குவரத்து கட்டுப்பாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியா-சீனா போர்! 1962ல் நடந்தது என்ன:
ஒரு 'பிளாஷ்பேக்'

இந்திய - சீன போரின் 55வது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 20) கடைபிடிக்கப்படுகிறது. 'இந்தியா - சீனா பாய் பாய்' - 'இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள்' என்ற கருத்து இந்திய அரசால் அப்போது முன்வைக்கப்பட்டது. இதனால் சீனா போர் தொடுக்காது என்ற நம்பிக்கையில் இருந்தது.
இந்திய ராணுவமும் போருக்கு முழு அளவில் தயாராகாமலே இருந்தது. இந்நிலையில் 1962 அக்., 20ல் காஷ்மீரின் லடாக் பகுதியில் முதலில் தாக்குதலை சீனா தொடங்கியது. பின் அங்கிருந்து மக்மோகன் கோடு என அழைக்கப்படும் வடகிழக்கு வரையிலான எல்லைப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு இந்திய படையினரின் தொலைத்தொடர்பு சேவையை சீனா தகர்த்தது. சீன வீரர்கள் வேகமாக முன்னேறி இந்திய எல்லைப்பகுதிகளை கைப்பற்றினர். வீரர்களின் உயிர்பலியும் அதிகரித்தது. நிலைமையை உணர்ந்தநேரு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் உதவி கோரினார். இதற்கு அந்நாடுகள் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என நினைத்த சீனா, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தயாரானது. நவ., 21ல் போர் முடிவுக்கு வந்தது