16 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

அப்துல்கலாம் பிறந்த தினவிழா

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் பிறந்த தினம், அவரது நினைவகத்தில் கலாம் அண்ணன், அமைச்சர், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்தனர்.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பத்தாவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.

இன்று


உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர். அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1881 அக்டோபர் 16

பண்டிதமணி என, அழைக்கப்பட்ட மு.கதிரேச செட்டியார், சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில், முத்துகருப்பன் - சிவப்பி ஆச்சி தம்பதிக்கு மகனாக, 1881 அக்., 16ல் பிறந்தார். ஏழாம் வயதில் திண்ணை பள்ளியில் சேர்ந்தார். அப்போதே, ஆத்திசூடி, உலக நீதி ஆகியவற்றின் சொல்லழகு இவரைக் கவர்ந்ததால் படிப்படியாக திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நுால்கள் ஆகியவற்றை, தாமே ஓதி உணர்ந்தார். அண்ணாமலை பல்கலையில் தமிழ் பணியில் ஈடுபட்டார். நாராயண சாஸ்திரி என்பவரிடம் ஹிந்தி மொழியை கற்றார். தன் இரு மொழி புலமையால், மொழிபெயர்ப்பு நுால்களை இயற்றினார்.1953 அக்., 24ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.