10 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

குடியேற்ற விதிகளில் மாற்றம்: அதிபர் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: தகுதி அடிப்படையிலான குடியேற்ற திட்டத்தை, அமெரிக்க பார்லிமென்டின் ஒப்புதலுக்கு, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் அனுப்பி உள்ளார். இத்திட்டம் ஏற்கப்பட்டால், இந்தியர்களுக்கு பாதகமாக அமையும் என, கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர், டிரம்ப், 'அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தற்போது, குடியேற்ற விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டத்தை, அந்நாட்டு, பார்லி., ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு : அமெரிக்காவின் தாலெர் தேர்வு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டின், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை, அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், 72, பெறுகிறார்.

போலீஸ் எஸ்.ஐ.,யாக திருநங்கை பொறுப்பேற்பு

போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்ற திருநங்கை, பிரித்திகா யாசினி, சென்னையில் பொறுப்பேற்றார்.
தமிழக காவல் துறையில், காலியாக இருந்த, எஸ்.ஐ., பணியிடங்கள், 1,078ஐ நிரப்புவதற்கான தேர்வை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2015ல் நடத்தியது. இதற்கு விண்ணப்பித்திருந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, திருநங்கை பிரித்திகா யாசினி நிராகரிக்கப்பட்டார். பின், சட்டப் போராட்டம் நடத்தி, எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்றார். நாட்டில் முதல் திருநங்கை, எஸ்.ஐ., என்ற பெருமையும் பெற்றார்.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்கா

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: 27 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து தகுதி

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது.

சர்வதேச ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா

அமெரிக்க ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று


1908 அக்டோபர் 10

நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என, பல துறைகளிலும் புகழ் ஈட்டிய, கே.பி.எஸ்., என்று அழைக்கப்படும், கே.பி.சுந்தராம்பாள், ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், 1908 அக்.,10ல் பிறந்தார். எஸ்.ஜி.கிட்டப்பா, தன் குரல் வளத்தால், நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்து புகழுடன் இருந்து வந்தார். 1926ல், கிட்டப்பாவுடன், வள்ளி திருமணம் என்ற நாடகத்தில், சுந்தராம்பாள் நடித்தார். பின், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்; 1933ல் கிட்டப்பா காலமானார்.  காமராஜர் ஆட்சியின் போது, 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இசைப் பேரறிஞர், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 1980 செப்., 19ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.