1 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி பதவியேற்கிறார்

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.இந்த நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்தார். இதில் தமிழகத்துக்கு புதிய கவர்னராக 77 வயதான பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக காஷ்மீர் சென்றார், நிர்மலா சீதாராமன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்

ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, நிர்மலா சீதாராமன் முதல் முறையாக காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்கு 2 நாட்கள் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 2-வது நாளான நேற்று லே-காரகோரம் பகுதிகளை இணைக்கும் வகையில் பிரதாம்-ஷையோக் இடையே கட்டப்பட்டுள்ள மிக உயரமான மலைப்பாதை பாலத்தை அவர் திறந்துவைத்தார். இந்த பாலத்தின் வழியாக காஷ்மீரில் தார்புக்-சையோக்-தவ்லத் பெக் ஓல்டே பகுதிகளுக்கு ராணுவ தளவாடங்களை எளிதில் எடுத்து செல்ல முடியும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2.33 உயர்வு

வீடுகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2.33 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.