01 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

அஞ்சலக கணக்குகளில் மதுரை முதலிடம்

தேனி; தென் மண்டல அஞ்சல் கோட்ட அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட சேவை வழங்குவதில் மதுரை அஞ்சல் கோட்டம் முதல் இடத்தையும், தேனி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் தென் மண்டல அளவில் 11 அஞ்சல் கோட்டங்கள் உள்ளன. கோட்ட அளவில் பணியாளர் சேமிப்பு கணக்கு திட்டம், நிரந்தர வைப்பு நிதித் திட்டம், தொடர் வைப்பு நிதித்திட்டம், தங்க மகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக விபத்து காப்பீட்டுத் திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகிறது.

உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா - எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள்

புதுடில்லி : உலகளவில், தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, 30 இடங்கள் முன்னேறி, முதல், 100 இடங்களுக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது, நிறைவேறி இருக்கிறது.

துப்பாக்கி சுடுதல்: ஹீனாவுக்கு தங்கம்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது.

இன்று


1959 நவம்பர் 1

எம்.கே.தியாகராஜ பாகவதர், மயிலாடுதுறையில், கிருஷ்ணமூர்த்தி -- மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1910 மார்ச் 1 ல் பிறந்தார்.தமிழ் திரைப்பட துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன்; சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகர். 1934ல் பவளக்கொடி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான, இவர், 15 தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1948ல் நடந்த விசாரணையின் போது, குற்றமற்றவர் என கூறி, நீதிமன்றம் விடுவித்தது. பின், அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நொடிந்து போன அவர், படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்தார். ௧௯௫௯ நவ., 1ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.