9 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

21-ஆவது ஜிஎஸ்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது

21-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் பொதுக்கூட்டம் நிதிமயமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஐதராபாத்தில் சனிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்த்த அரசு ஒப்புதல்

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின், ஓய்வூதியத்தை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 'சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, மாதாந்திர ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 13 ஆயிரம் ரூபாயாகவும்; அவர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியம், 6,000 ரூபாயில் இருந்து, 6,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பழநியில் ரூ.9.12 கோடியில் காய்கறி மேலாண்மை மையம்: கலெக்டர் ஆய்வு

பழநியில் காய்கறிகள், பழங்களை பாதுகாக்க ரூ.9.12 கோடியில் குளிர்பதன கிடங்குகளுடன், தொடர் வணிக மேலாண்மை மையம் உருவாக்கப்பட உள்ளது.

அமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான, மணிஷா சிங்என்பவருக்கு, 45, பொருளாதார விவகாரங்களுக்கான, வெளியுறவு துணை அமைச்சர் பதவி வழங்க, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது

சிங்கப்பூரில், அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய பெண்ணுக்கு, 'சிறந்த சமூக சேவகர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்

இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே, ஆண்கள் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஹாங்காங் ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் ஜோஷ்னா

ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெள்ளிக்கிழமை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன்: இறுதிச்சுற்றில் ஸ்டீபன்ஸ் - மேடிசன் பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இரு முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், அரையிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

உயிர் காக்கும் உயரிய உதவி இன்று உலக முதலுதவி தினம்

முதலுதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக ரெட்கிராஸ் அமைப்பால், செப்டம்பர் 2வது சனிக்கிழமை (செப்., 9) உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.