5 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியா


கற்பித்தல் பணியாற்றி வரும் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் வர்க்கத்திற்கு தலைவணங்குகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.



தமிழகம்


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விளையாட்டு


ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்தார். பந்துவீச்சில் பும்ரா 4-ம் இடத்துக்கு முன்னேறினார்.


விளையாட்டுத் துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், இந்திய விளையாட்டுத் துறையை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வார் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி கூறினார்.


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2018-2022) ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியுள்ளது.



தெரிந்து கொள்வோம்


இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 சதவீதமாக இருந்தது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று


அன்னை தெரசாவின் இறந்த தினம் இன்று. அவர் 1997 -ல் மரித்தார்