4 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியா


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிடைக்கக் கூடிய சாதகங்களை விட குறுகிய கால பாதகங்களே அதிகம் இருக்கும் என்பதால் அந்த நடவடிக்கையை நான் விரும்பவில்லை. இதன் மூலம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிய விட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு ரகுராம் ராஜன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தில்லி நீர்வளத் துறை பொறுப்பை ஏற்க, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு


இந்தியா-இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.