27 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி
ஜெத்தா: சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.1,307 கோடி நன்கொடை: இந்திய தம்பதி தாராளம்
ஹூஸ்டன்: அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக, அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் தம்பதி, 1,307 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளனர்.
சாதனை பெண்மணி "ஏஞ்சலா மெர்க்கல்'
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமர் தேர்தல் நடக்கிறது. 2005ல் இருந்து 3 முறை அந்நாட்டின் பிரதமராக இருப்பவர் ஏஞ்சலா மெர்க்கல். 4வது முறையாகவும் போட்டியிட்டார். நடந்த முடிந்த இத்தேர்தலில் அவரது கட்சி (சி.டி.யு.,) அதிக இடங்களை (246) கைப்பற்றியுள்ளது. இருப்பினும் பெரும்பான்மை பெற அவருக்கு இன்னும் 109 இடங்கள் தேவை என்பதால், கூட்டணி கட்சிகள் (எப்.டி.பி., , தி கிரீன்ஸ்) ஆதரவுடன் 4வது முறையாக ஆட்சி அமைப்பார் என தெரிகிறது.
கலெக்டர்களுக்கு முதல்வர் விருது
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணி புரிந்த, ஐந்து மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி, மாநில விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு, மாநில விருதுகள் வழங்கப்படும். 2003க்கான மாநில விருது, அப்போதைய திருவண்ணாமலை கலெக்டர், தீரஜ்குமார்; 2005 விருது, அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர், வீரசண்முகமணி; 2014 விருது, அப்போதைய சென்னை கலெக்டர், சுந்தரவல்லி; 2015 விருது, அப்போதைய துாத்துக்குடி கலெக்டர், ரவிக்குமார்; இந்த ஆண்டிற்கான மாநில விருது, முன்னாள் சேலம் கலெக்டர், சம்பத் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
சூரிய சக்தி மின்சாரம்: தனியாருடன் ஒப்பந்தம்
தமிழகத்தில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், நேற்று, முதல்வர் பழனிசாமி முன்னிலையில், நான்கு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
ரூ.20 கோடி பணிகள் : முதல்வர் திறந்து வைப்பு
சென்னை: உள்ளாட்சி துறை சார்பில், 20 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட, பல்வேறு திட்டப் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர், பழனிசாமி திறந்து வைத்தார்.
அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தோள் மூட்டு அறுவை சிகிச்சை மையம்
சென்னை: சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், தோள் மூட்டு மற்றும், 'ஸ்டெம்செல்' சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்க அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
சென்னை: அமெரிக்க துாதரக அதிகாரிகள், நேற்று முதல்வரை சந்தித்து பேசினர். சென்னையில் உள்ள, அமெரிக்க துாதரகத்தின் துணை துாதர், ராபர்ட் பர்கஸ், அரசியல் மற்றும் பொருளாதார அலுவலர், கென் மெக்பிரைட், முதுநிலை அரசியல் மற்றும் பொருளாதார
நிபுணர், சுப்பிரமணி மான்கொம்பு ஆகியோர், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.அப்போது, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர், சண்முகம் உடனிருந்தனர்.
அக்.1 முதல் 15ம் தேதி வரை தூய்மை இரு வாரம்
மதுரை: ''துாய்மை பாரதம் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊராட்சிகளில் துாய்மை இரு வாரம் (சுவட்ச்ஹட பக்வாடா) நடத்த வேண்டும்,'' என, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் தலைவாஸ் 'த்ரில்' வெற்றி
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐசிசி புதிய விதிமுறை நாளை முதல் அமல்: மோதலில் ஈடுபடும் வீரர் வெளியேற்றப்படுவார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய கிரிக்கெட் விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. புதிய விதிமுறைப்படி நடுவருடனோ அல்லது களத்தில் மற்றவர்களுடனோ மோசமான மோதலில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட வீரரை நடுவர் வெளியேற்ற முடியும். வெளியேற்றப்படும் வீரர், அந்த ஆட்டத்தின் எஞ்சிய பகுதிகளில் விளையாட முடியாது. அதாவது கால்பந்து விளையாட்டில் ரெட் கார்டு பெறுவதைப் போன்றதாகும்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ், தாராபுரம், கொழிஞ்சிவாடி என்ற ஊரில், கிருஷ்ணாராவ் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1933 செப்.,27 ல் பிறந்தார். கோவையில் பட்டப்படிப்பை முடித்த அவர், ரயில்வேயில் எழுத்தராக பணிபுரிந்தார். பின், அமெச்சூர் நாடகங்களில் நடித்தார்.கடந்த, 1959ல், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமானார். 1,000 படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். 2009, ஜன., 31ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.
98 வயதில் எம்.ஏ., பட்டம் சாதனை படைத்த தாத்தா
பாட்னா: பீஹாரைச் சேர்ந்த, 98 வயதாகும் ராஜ்குமார் வைஷ்யா, அதிக வயதில் முதுகலை பட்டம் பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.
“இந்த வயதில் படிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்,” என்கிறார், வைஷ்யா.

இன்று

தினம் ஒரு தகவல்