26 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

ரஷ்யா-பாக்., கூட்டு ராணுவ பயிற்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம், ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவில் நடந்து வரும் இந்த கூட்டு பயிற்சியில், பயங்கரவாத தடுப்பு
உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா முதல்வர் இன்று தென்கொரியா பயணம்

தேவேந்திர பட்னாவிஸ் 4 நாட்கள் பயணமாக இன்று தென்கொரியா செல்கிறார். அங்கு அவர் பல்வேறு வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சாம்சங், ஹூண்டாய், எல்,ஜி., எலக்டரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

குறைந்தபட்ச இருப்பு தொகை : எஸ்.பி.ஐ., புதிய அறிவிப்பு

மும்பை: சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிந்துவுக்கு பத்ம பூஷண்: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை நாட்டின் 3-ஆவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு மத்திய விளையாட்டு

மினி உலகக் கோப்பை கால்பந்து: நீலகிரி இளைஞர்கள் மூவர் தேர்வு

துனீஷியாவில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மாநில கூடைப்பந்து: மதுரை அணி சாம்பியன்

புதுக்கோட்டையில் நடைபெற்ற புதுகை கோப்பைக்கான நான்காம் ஆண்டு மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினம் ஒரு தகவல்


ஆராய்ச்சிகளின் சிகரம் சிக்ரி

எண்ணற்ற ஆராய்ச்சிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து தன் சிறப்பான பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது காரைக்குடியின் 'சிக்ரி'.
மத்திய அரசின் தொழிலக ஆய்வுக்குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்) சார்பில் இந்தியா முழுவதும் 38 ஆராய்ச்சி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றான காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) 1948 ஜூலை 25-ல் அப்போதைய பிரதமர் நேருவால் அடிக்கல்
நாட்டப்பட்டு, 1953 ஜனவரியில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த மையம் அமைய அழகப்ப செட்டியார் ரூ.15 லட்சம் நிதி மற்றும் 300 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். தற்போது 115 விஞ்ஞானிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட
பி.எச்டி., மாணவர்களுடன் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மின் வேதியியலை அடிப்படையாக கொண்டு உலோக அரிமானத்தை தடுக்கும் வர்ண பூச்சுகள், மின்கலன்கள், நோய் சம்பந்தப்பட்ட கிருமிகளை ஆராய பயன்படும் நவீன சென்சார்கள், மின் முலாம் பூசுதல், விவசாயிகளுக்கான மண்வளம் அறியும் கருவி என பல்வேறு கண்டுபிடிப்புகளின் தொழில் நுட்பங்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மின்கலம், அரிமானம், பிளேட்டிங், எலக்ட்ரோ ஆர்கானிக், எலக்ட்ரோ இன் ஆர்கானிக், எலக்ட்ரோ மெட்டலார்ஜி என்ற ஆறு துறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.