25 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடு : அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு
வாஷிங்டன்: வெளிநாட்டினர், அமெரிக்காவுக்கு வருவதற்கு கடும் கட்டுப்பாடுளை விதிக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக, ஜனவரியில், டிரம்ப் பதவியேற்றார். சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஈரான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து, அகதிகள் மற்றும் சுற்றுலா பயணியர், அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார்; இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
டிரம்பின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து, அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்து, தடைக்கு மாற்றாக, 'விசா' வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இதன்படி, குறிப்பிட்ட ஆறு நாடுகளில் இருந்து வருவோர், தங்கள் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான ஆதாரங்களை, விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
ஜெர்மனியில் பொது தேர்தல் : ஏஞ்சலாவுக்கு மீண்டும் வெற்றி
பெர்லின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியில் நேற்று, பொதுத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், தற்போதைய பிரதமர், ஏஞ்சலா மெர்க்கல், நான்காம் முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்
நீர் வளத்துக்கு தனி துறை : தமிழக அரசு முடிவு
பொதுப்பணித் துறையில் இருந்து, நீர் வளத்துறையை பிரித்து, பிரத்யேக துறையாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு நிறுவனம், கொதிகலன் இயக்கம் உட்பட, பல பிரிவுகள் உள்ளன. நீர் வளத் துறையானது, அணைகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு போன்றவற்றை கவனிக்கிறது. நீர்வழித்தடங்களை மேம்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறது. கேரளா, கர்நாடகா உட்பட, பல மாநிலங்களில் உள்ளது போல், நீர்வளத்துறையை தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. விரைவில், நாடு முழுவதும் நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு துவங்க உள்ளது.
மைக்ரோ ஏ.டி.எம்.,முடன் தபால்காரரை
களமிறக்க திட்டம்
புதுடில்லி:வரும், 2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.
3-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.