23 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

போர் கப்பலை தாக்கி அழிக்கும் புது ஏவுகணை

எதிரி நாட்டு போர் கப்பலை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இதன்மூலம் தங்கள் நாட்டு கடற்படையை மேம்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தது.

ஐ.நா. பொது சபையில் இன்று உரையாற்றுகிறார் சுஷ்மா சுவராஜ்

ஐ.நா. பொது சபையில் இன்று உரையாற்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயங்கரவாதம், காலநிலை மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈரான் புது ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கைக்கு சவால்

நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் விதமாக ஈரான் அரசு புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியது. ஈரான் நாட்டின் ராணுவ அணிவரிசை வெள்ளிக்கிழமை நடத்தியது. அதில், இந்தப் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், பிரணாய் தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டனர்.

4-ஆவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து: நவம்பர் 17-இல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளம் மோதல்


4-ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தாவும், கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.

புரோ கபடி: யு-மும்பாவுக்கு 8-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது.