22 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

அணு ஆயுத தடை ஒப்பந்தம்: 50 நாடுகள் ஆதரவு

நியூயார்க்: ஐ.நா., சபையில், கொண்டு வரப்பட்ட, அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில், 50க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன; எனினும், அமெரிக்கா, ரஷ்யா உட்பட, வல்லரசு நாடுகள், ஒப்பந்தத்தை புறக்கணித்தன.

இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி: உலக வங்கி பாராட்டு

கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்த இருந்தது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இந்தியா உடன், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவையும் வளர்ச்சி கண்டு வருகின்றன. விளை பொருள் ஏற்றுமதியாளர்களை விட, இறக்குமதியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், வளர்ச்சி சீராக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன் குறித்து, உன்னிப்பாக, உலக வங்கி கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு

''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் தூய்மை திட்டம்

சென்னை: நாடு முழுவதும், செப்., 15 - அக்., 2 வரை, சிறப்பு துாய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில், 'துாய்மையே சேவை இயக்கம்' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில், இத்திட்டத்தை நேற்று, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் துவக்கினார்.

தொழிலக பாதுகாப்பு துறைக்கு புதிய இயக்குனர்

சென்னை: தமிழக அரசின், தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனராக, காளியண்ணன் பொறுப்பேற்றார்.

திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருநங்கைகளின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு ரூ.1,000 மாத ஓய்வூதியம், வீடு, ரேஷன் கார்டு மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஜப்பான் ஓபன் சிந்து, சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் தங்களின் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

கோலி 92, குல்தீப் ஹாட்ரிக்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது .

இன்று


1930 செப்டம்பர் 22

புகழ் பெற்ற, திரைப்பட பின்னணி பாடகர், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தார்.எட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்; பல பாடல்களையும் எழுதியுள்ளார். 'மதுவண்டு' என்ற புனைப்பெயரில், தமிழ் கவிதைகளை எழுதினார்.வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள, ஹிந்தி பாடல்களை இவரே இயற்றினார். 2014 ஏப்., 14ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.