21 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

'ஆப்பரேஷன் சாகர் கவாச்' : போலீசார் சுய சோதனை துவக்கம்

தமிழக காவல் துறை நடவடிக்கைகளை, சுய பரிசோதனைக்கு உள்ளாக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு படை மற்றும் போலீசார் இணைந்து நடத்தும், 'ஆப்பரேஷன் சாகர் கவாச்' எனப்படும், பாதுகாப்பு ஒத்திகை துவங்கி உள்ளது.

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

சென்னை: வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

சவுதியில் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு அனுமதி

ரியாத்: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், முதல் முறையாக விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தோனிக்கு பத்ம பூஷண்: பிசிசிஐ பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனியின் பெயரை, இந்தியாவின் 3-ஆவது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ஸ்பாட் ஃபிக்ஸிங்: காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டு தடை

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது

இன்று


அமைதியான உலகம் அளவில்லாத இன்பம்...இன்று உலக அமைதி தினம்

உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் 1981 முதல் ஆண்டுதோறும் செப்., 21ம் தேதி, சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது

1979 செப்டம்பர் 21

பிரபல கிரிக்கெட் வீரர் கிரிஸ் கெயில், கரீபியன் தீவு நாடான, ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில், 1979, செப்., 21ல் பிறந்தார்.டெஸ்ட் போட்டிகளில், 15 சதமும், ஒரு நாள் போட்டிகளில், 22 முறையும், 'டி - 20' போட்டிகளில், இரண்டு முறையும் சதம் அடித்துள்ளார். கெயில் பிறந்த தினம் இன்று.