20 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

'பிரீமியம் எச் - 1பி' விசா வழங்குவது துவங்கியது

வாஷிங்டன்: ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'பிரீமியம் எச் - 1பி' விசா வழங்கும் நடவடிக்கைகளை, அமெரிக்கா மீண்டும் துவக்கி உள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்க செல்வோருக்காக, 'எச் - 1பி' விசா வழங்கப்படுகிறது.

உலகின் வயதான பெண் காலமானார்

வாஷிங்டன்: உலகின் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்ற, ஜமைக்காவை சேர்ந்த, வைலட் மோஸ் பிரவுன், 117, உடல் நலக்குறைவால் காலமானார்.

தனி இயக்குனரகமாகிறது பழங்குடி ஆய்வு நிறுவனம்

பழங்குடியினர் ஆய்வு நிறுவனங்கள், தனி இயக்குனரக அதிகாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதால், அதன் செயல்பாடுகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மலேஷிய அமைச்சர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: மலேஷிய அமைச்சர்கள், நேற்று முதல்வர், பழனிசாமியை சந்தித்து பேசினர். மலேஷிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், தத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியன், கல்வித் துறை துணை அமைச்சர், தத்தோ கமலநாதன் ஆகியோர், நேற்று சென்னை, தலைமை செயல கத்தில், முதல்வர், பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். அப்போது, அமைச்சர்கள், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உடன்இருந்தனர்.

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்

கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இரு பிரிவுகளின் பிரதான சுற்றுக்கு சாத்விக்சாய்ராஜ் முன்னேற்றம்

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.

ஹாக்கி: பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

பெல்ஜியத்தில் நடைபெற்ற அந்நாட்டு ஆடவர் இளையோர் அணிக்கு எதிரான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று


1924 செப்டம்பர் 20
தென்னிந்திய நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வர ராவ், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ராமாபுரம் என்ற ஊரில், அக்கினேனி வேங்கட ரத்தினம் - புன்னம்மா தம்பதிக்கு மகனாக, 1924செப்., 20 ல் பிறந்தார். தேவதாஸ், லைலா மஜ்னு, அனார்கலி, பிரேமாபிஷேகம், பிரேம் நகர், மேக சந்தேசம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிக்கரமாக ஓடின. மூன்று முறை தெலுங்கு மொழிக்கான, பிலிம்பேர் பத்திரிகையின், சிறந்த நடிகர் விருதை பெற்றவர்.
பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகிப் பால்கே, என்.டி.ஆர்., தேசிய விருதுகளை பெற்றவர். 2014 ஜன., 22ல் காலமானார்; அவர் பிறந்த தினம், இன்று.