2 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் 9 புதிய அமைச்சர்கள் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை புதுச்சேரியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, 41-38 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தோற்கடித்தது.