16 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

 

நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில், 'உறுப்பு மீட்பு மையம்'

திருநெல்வேலி: ''நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில், 'உறுப்பு மீட்பு மையம்' அமைக்கப்படும்,'' என, டீன் சித்தி அத்திய முனைவரா தெரிவித்தார்.

ஐ.என்.எஸ்., தலைவராக அகிலா உராங்கர் தேர்வு

பெங்களூரு: ஐ.என்.எஸ்., எனப்படும், 'இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி'யின், தலைவராக, அகிலா உராங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் சம்பளம் ‛கட்'

திஸ்புர்: வயதான பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு பணியாளர்களின் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யும் வகை செய்யும் புதிய மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேறியது.

இனி ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அல்லது ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு ஆதார் எண் அவசியம் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு சி.என்.ஆர்., விருது

சென்னை: சி.என்.ஆர்.ராவ் விருதுக்கு, சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை, ஐ.ஐ.டி.,யின் வேதியியல் துறை பேராசிரியர், சங்கர நாராயணன். இவர், ௨௦ ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மொபைல் போன் இணைப்பு : மூன்றாவது இடத்தில் தமிழகம்

மொபைல் போன் மற்றும், 'லேண்ட் லைன்' என்ற, தரைவழி தொலைபேசி இணைப்பு பயன்பாட்டில், நாட்டில் மூன்றாவது இடத்தை, தமிழகம் பிடித்துள்ளது. இது தொடர்பாக, 'டிராய்' என்ற, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில், ஆகஸ்ட், 1 நிலவரப்படி, 118.6 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. அத்துடன், 2.39 கோடி லேண்ட் லைன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தொலைத்தொடர்பு வசதி பயன்பாட்டில், அதாவது, 100 பேருக்கு ஒரு இணைப்பு என்ற கணக்கு அடிப்படையில், நாட்டில் மூன்றாவது இடத்தை, தமிழகம் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் 5 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை கிராமம்

நெடுஞ்சாலை கிராம திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாராகி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தனியார் முதலீட்டை ஈர்க்கவும், வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை கிராமம் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

9.5 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த முதலை கண்டுபிடிப்பு

நியூயார்க் : ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, டைனோசர்களை விழுங்கும் திறன் உடைய முதலை இனத்தை, அமெரிக்க தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று

1916 செப்டம்பர் 16

கர்நாடக இசை பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, 1916 செப்.,16 ல், மதுரையில், சுப்பிரமணிய ஐயர் - சண்முக வடிவு அம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்தார். எட்டு வயதில், 'மரகத வடிவம்' என்ற செஞ்சுருட்டி ராக பாடலை, உச்சஸ்தாயியில் பாடி அசத்தியவர். உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டு துாதராக சென்று, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். 'பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், பத்ம விபூஷண், சங்கீத கலா சிகாமணி, இந்திரா காந்தி, பாரத ரத்னா' விருதுகளை பெற்றவர். அவர் பிறந்த தினம், இன்று.