14 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

வெள்ளை மாளிகையில் இந்தியருக்கு முக்கிய பதவி

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஷாவை, வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை உதவி முதன்மை செயலராக, அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.

அனைவருக்கும் வீடு திட்டம் செப்., 30ல் ஆய்வு நிறைவு

மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், 2022க்குள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், ஏழை மக்களுக்கு, இலவச வீடு கட்டும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்த உள்ளது. இதற்கான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிசை மாற்று வாரியம் வாயிலாக நடக்கிறது. இதில் ஏராளமானோர், ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வீட்டுவசதி திட்டத்துக்கு வந்த விண்ணப்பங்களை, தமிழக அரசு ஆய்வு செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆம்லா, பெரேரா அதிரடி; பாகிஸ்தானுக்கு உலக லெவன் அணி பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது உலக லெவன் அணி.

முகப்பு விளையாட்டு செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

கனடாவில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மூன்று பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.