13 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்திய அமெரிக்கருக்கு முக்கிய பொறுப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதார துறைக்கான துாதரக பொறுப்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மனிஷா சிங்கை நியமிக்க, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
'பிரெக்சிட்' மசோதா பிரிட்டனில் நிறைவேறியது
லண்டன்: ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' மசோதா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேறியது. ஐரோப்பாவைச் சேர்ந்த, 28 நாடுகளின் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன். இதன் முடிவுக்கு ஏற்பவே, உறுப்பு நாடுகள் செயல்படும். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
உடல்உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் : கருத்தரங்கில் தகவல்
மதுரை: ''உடல் உறுப்பு தானத்தில், தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது,'' என, சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி பேராசிரியர் சதீஷ்லோகிதாசன் பேசினார். இதற்கு அடுத்த இடத்தில்தான் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
தென் கொரிய ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்
தென் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் டிரா
இந்திய மகளிர் அணி-பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணிகள் இடையிலான ஹாக்கிப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.