12 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை

தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


அறிவியல் விழா: 10ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், அக்., 13 முதல், மூன்று நாட்கள், சர்வதேச அறிவியல் விழா நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவர்கள், 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் இயங்கும், தேசிய கடலியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து, மூன்றாவது சர்வதேச அறிவியல் விழாவை நடத்த உள்ளன. இந்த விழா, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில், அக்., 13-16 வரை நடக்கிறது.


ஐ- போன் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச் இன்று வெளியீடு

இன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் வெளியாகிறது.

16-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்றுள்ள நடால், ஒட்டுமொத்தமாக 16-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்) சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று


சி.வை.தாமோதரம் பிள்ளை, இலங்கை, யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில், வைரவநாத பிள்ளை - பெருந்தேவி தம்பதிக்கு மகனாக, 1832  செப்டம்பர் 12ல், பிறந்தார். சட்டம் பயின்ற அவர், கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1884ல் புதுக்கோட்டை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பணி ஓய்வு பெற்ற தாமோதரம் பிள்ளைக்கு, 1895ல், 'ராவ் பகதுார்' பட்டமளிக்கப்பட்டது.