11 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

நிலுவை வழக்குகளை இல்லாமல் செய்த 4 மாநிலங்கள்

நாட்டிலேயே முதல் முறையாக 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வழக்குகள் அனைத்து முடித்து வைக்கப்பட்டுள்ளன. அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும், சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் 10 ஆண்டுகளுக்கு மேலான நிலுவை வழக்குகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கணினி திரை, வீட்டு உபயோக பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

கணினி திரை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 21-ஆவது அமர்வுக் கூட்டத்தில்,40 பொருள்களின் வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

யு.எஸ்., ஓபன்: ரபேல் நடால் சாம்பியன்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று

  • சுப்பிரமணிய பாரதியார், துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயர் - இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1882, டிச., 11ல் பிறந்தார். 1921 ஜூலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்ட அவர், செப்., 11ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.

  • அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட 16வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.