29 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
தமிழகம்
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
வரும் கல்வியாண்டு (2018-19) முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ("பான்') ஆதாரை இணை இணைப்பதற்கு வியாழக்கிழமை (ஆக.31) கடைசி நாளாகும்.
விளையாட்டு
இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்மன்பிரீத் கெளரும் ஒருவர். இந்த விருது தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
அரைஸ் ஸ்டீல்-தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ) சார்பில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தடகள வீரர் லட்சுமணன் ஆகியோருக்கு ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டது.