24 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
தமிழகம்
தமிழகத்தில் கிராமப் புறங்களிலும் அரிதாகி வரும் 21 வகையான அரிய மூலிகை தாவரங்களை வளர்க்கும் திட்டத்தை வனத் துறை செயல்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் குற்றவாளியை அடையாளம் காணும் மென்பொருள் வசதியுடைய கேமராக்களை நிறுவ ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக "பயணிகள் வசதிகள் குழு'வின் உறுப்பினர் டாக்டர் அசோக் திரிபாதி தெரிவித்தார்.
விளையாட்டு
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்-யு.பி.யோதா அணிகள் இடையிலான ஆட்டம் 33-33 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.