23 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியா


மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 276 புள்ளிகள் உயர்ந்து 31,568 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 9,853 புள்ளிகளாக இருந்தன.

மத்திய ரயில்வே அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை 'திடீர்' என்று ராஜிநாமா செய்துள்ளார்.

சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

தமிழகம்


சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு


சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி புதன்கிழமை தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிவில்லியர்ஸ், புதன்கிழமை தெரிவித்தார்.