22 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்


தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விளையாட்டு


சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதை நம்ப முடியவில்லை என்று ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் சாம்பியன்.

இன்றைய தினம்


தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை இன்று 378வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை என அழைக்கப்படும் மதராஸ் நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி உருவாக்கப்பட்டது.