21 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
தமிழகம்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகழாண்டில் கூடுதலாக 2,653 இடங்களை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.) தமிழக அரசு கோரி உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு எம்சிஐ -யிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.
விளையாட்டு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.