20 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
தமிழகம்
இன்று நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகிறார்?: 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது. அணிகள் இணைப்பு குறித்து முதல்வர் எடப்பாடி
விளையாட்டு
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
இன்றைய தினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறந்தார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சபாநாயகர் மீராகுமார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.