14 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
சுதந்திர தின விழா, நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டின் 14-ஆவது குடியரசுத்தலைவராக பதவி ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்த், சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை திங்கட்கிழமை பதிவு செய்தார். அதில், புதிய இந்தியாவுக்காக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பயணிகள் நலன் கருதி, ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம்
ராணுவ வீரர் இளையராஜா உடல் திங்கட்கிழமை மதியம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன், மதுவரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.