12 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
ஆகஸ்ட் 11, நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உலகம்
எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகம்
கோயம்புத்தூர்-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளையாட்டு
இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை தொடங்குகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.