1 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியா


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக அனிதா கர்வாலை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக குறைந்தது.

தமிழகம்


விழுப்புரம் மாவட்டத்தில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

விளையாட்டு


இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

கோவையில் நடைபெற்ற பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக அளவிலான நாட் அவுட்களைக் கொண்ட வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.